RPF SI Sexual Assault: இளம்பெண்ணை பின்தொடர்ந்து சில்மிஷம் செய்த இரயில்வே எஸ்.ஐ.. பணியிடைநீக்கம் செய்த உதவி ஆணையர்; விசாரணையில் அதிர்ச்சி..!
மப்டி சீருடையில் அரைபோதையில் இரயில் நிலையத்தில் உலாவி வந்த இரயில்வே காவல்படை உதவி ஆய்வாளர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஏப்ரல் 03, தாம்பரம் (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம் (Tambaram) இரயில் நிலையத்தில், இரயில்வே பாதுகாப்புப்படையில் உதவி ஆய்வாளராக (Tambaram Railway Police Sub Inspector) பணியாற்றி வருபவர் சீனிவாஸ் நாயக் (வயது 22). நேற்று இரவில் தாம்பரம் இரயில்வே சுரங்கப்பாதையில் வேலை முடிந்து மப்டி உடையில் இருந்துள்ளார்.
அப்போது, அவ்வழியே சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்ற சீனிவாஸ் நாயக், பாலியல் தொல்லை (Sexual Assault) கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார். நிகழ்விடத்தில் இரயிலில் பயணிக்க சென்றவர்கள் சீனிவாஸை கண்டித்து இருக்கின்றனர்
அதனால் ஆத்திரமடைந்த சீனிவாஸ் நாயக் இளைஞர்களை பதிலுக்கு தாக்கி, அவர்களின் கைவிரலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இதற்குள்ளாக விஷயம் தொடர்பாக இளம்பெண் கணவருக்கு போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். Dairy Milk Chocolate Worms: காதலர்களின் பிரத்தியேக சாக்லேட்டில் நெளிந்த புழுக்கள்.. காலாவதியாகாத டைரி மில்க் சாக்லேட்டில் சம்பவம்.!
மனைவியின் பதற்ற குரலை கேட்டு அதிர்ந்துபோன கணவர், தனது நண்பர்களுடன் இரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து ரகளை செய்த சீனிவாஸை மடக்கிப்பிடித்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரை தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்கள், புகார் அளித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் விசாரணை தொடங்கியுள்ளது, துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சீனிவாஸ் நாயக்கை பணியிடைநீக்கம் செய்து இரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆணையர் ராஜய்யா உத்தரவிட்டு இருக்கிறார். விசாரணையில், சீனிவாஸ் நாயக் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் அம்பலமானது.
(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 03:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

