Yash Spotted with Family: குடும்பத்துடன் மும்பை நகரின் வீதிகளில் நடிகர் யாஷ்; அசத்தல் வீடியோ உள்ளே.!

கேஜிஎப் படத்திற்கு பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நாயகன் யாஷ், தற்போது டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். அவர் குடும்பத்துடன் மும்பை நகரை சுற்றி வருகிறார்.

Yash Spotted with Family: குடும்பத்துடன் மும்பை நகரின் வீதிகளில் நடிகர் யாஷ்; அசத்தல் வீடியோ உள்ளே.!
Actor Yash with Family (Photo Credit: Instagram)

நவம்பர் 27, மும்பை (Cinema News): கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர்கள் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, வசிஷ்டா சிம்பா, ராமச்சந்திர ராஜு, அர்ச்சனா ஜோய்ஸ் உட்பட பலர் நடிக்க, ரூபாய் 80 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் (KGF Movie) திரைப்படம், கன்னட திரை உலகில் 2018 காலகட்டத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது ஆகும். இந்த திரைப்படம் கோலார் தங்க சுரங்கத்தின் அரசியல் நிகழ்வுகளையும், அதனை வைத்து அடிப்படையாக முன்னேறிய தாதா ஒருவரின் கற்பனை கதையை வைத்து எடுக்கப்பட்டது. Director Ashwini Dhir's Son Dies: பிரபல இயக்குனரின் 18 வயது மகன் விபத்தில் சிக்கி பலி; கண்ணீரில் குடும்பத்தினர்..! 

கேஜிஎப் 3, டாக்சிக்:

இப்படம் வெளியான பின்பு மிகப்பெரிய அளவில் வெற்றி அடையவே, தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அடுத்தடுத்து வெளியீடு செய்யப்பட்டது. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒட்டுமொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 300 கோடியை கடந்து வசூல் செய்தது சாதனை படைத்தது. பின், இப்படத்தின் இரண்டாம் பாகமும் விறுவிறுப்புடன் படமாக்கப்பட்ட நிலையில், அந்த பாகமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

முகாமில் முகாம்:

தற்போது மூன்றாவது பாகத்திற்காக கேஜிஎப் பட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே, தற்போது நடிகர் யாஷ், கேவிஎன் ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் (Toxic) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், 2025-இல் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் யாஷுடன் சாய்பல்லவி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்கி வழங்குகிறார், கேஜிஎப் திரைப்படத்திற்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் பேன் இந்திய திரைப்பட நபராக உருவெடுத்த யாஷ் கவனிக்கப்படுகிறார். இந்நிலையில், தற்போது டாக்சிக் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் அவர் முகாமிட்ட நிலையில், குடும்பத்தினருடன் மும்பை நகரில் சுற்றி வந்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

டாக்சிக் படத்தின் டீசர் வீடியோ உங்களின் பார்வைக்கு:

மும்பை நகரின் வீதிகளில் குடும்பத்துடன் வலம்வரும் நடிகர் யாஷ்:

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).