Lal Salaam TN Release: லால் ஸலாம் படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமைகளை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில் தேவ், ஜீவிதா, தங்கதுரை, தம்பி ராமையா உட்பட பலரும் லால் ஸலாம் படத்தில் நடித்திருக்கின்றனர்.
அக்டோபர் 12, சென்னை (Cinema News): ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth) இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் (AR Rahman) இசையில், லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் ஸலாம் (Lal Salaam). இப்படம் பொங்கல் 2024 பண்டிகையின்போது வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில் தேவ், ஜீவிதா, தங்கதுரை, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலரும் நடித்து இருக்கின்றனர். இதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். Gangajal GST Exempted: பூஜைக்கு பயன்படுத்தப்படும் கங்கை நீருக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த தகவலை ஏற்கனவே படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், படத்தின் முக்கிய அப்டேட் மாலை 04:30 மணியளவில் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது.
அதன்படி, படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, படத்தின் தமிழ்நாடு வெளியீடு உரிமைகளை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
Stay tuned for an exciting announcement from LAL SALAAM today at 4:30PM!@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @DOP_VishnuR @RamuThangraj @BPravinBaaskar @RIAZtheboss @V4umedia_ @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran#LalSalaam 🫡… pic.twitter.com/1DUc5EURl9
— Lyca Productions (@LycaProductions) October 12, 2023
(The above story first appeared on LatestLY on Oct 12, 2023 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

