IPL Auction 2025 Live

Leo Release Cancel at Rohini: விஜயின் லியோவுக்கு அடுத்த பெரும் சிக்கல்.. ரோகினி திரையரங்கம் கைவிரிப்பு.. முக்கிய திரையரங்குகளில் வெளியீடு கேள்விக்குறி.!

படத்தயாரிப்பு மற்றும் வெளியீடு நிறுவனங்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால், லியோ திரைப்படத்தை பல திரையரங்குகள் திரையிடவில்லை என தெரிவித்துள்ளன.

Thalapathy Vijay | Rohini Silver Screen (Photo Credit: Twitter)

அக்டோபர் 17 , சென்னை (Chennai): மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. கைதி, விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள லியோ திரைப்படம், லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது திரைப்படம் ஆகும்.

இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, லோகேஷின் இயக்கத்தை விரும்பும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாளை உலகளவில் வெளியாகும் லியோ திரைப்படம், தமிழ்நாட்டில் காலை 09:00 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது.

இதற்கிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அவை பல காரணங்களால் தடைபட்டது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருப்பதாக அவரின் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், படத்தின் வெளியீடு விவகாரத்தில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. படத்தயாரிப்பு நிறுவனமும் - திரையரங்கு உரிமையாளர்களும் இடையே நடத்த ஆலோசனை கூட்டத்தில் சில முடிவுகள் எட்டப்படவில்லை. Gaza Hospital Attack: காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்; கைவிரிக்கும் இஸ்ரேல்., குற்றச்சாட்டை முன்வைக்கும் பாலஸ்தீனிய அதிகாரிகள்.! 

இருதரப்புக்கும் சுமூகமான நிலை ஏற்படாத காரணத்தால் கோயம்பேடு ரோகினி திரையரங்கம் படத்தை வெளியிடவில்லை என அறிவித்துள்ளது. சென்னையின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்காக கருதப்படும் சில  குழுமங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இவர்களை தவிர்த்து சில திரையரங்கு நிறுவனங்கள் லியோ திரைப்படத்தை திரையிடவில்லை என தெரிவித்துள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே ரோகினி திரையரங்கில் லியோ டிரைலர் பதிவிடப்பட்ட சமயத்தில், விஜய் ரசிகர்கள் இருக்கைகளை சேதப்படுத்தி இருந்தனர். ரோகிணியின் முதன்மை காட்சி பதிவிடும் திரையில் இருக்கும் இருக்கைகள் லியோ வெளியீடுக்காக முழுவீச்சில் சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

படம் திரையிடப்படாத திரையரங்குகளில் ஒருவேளை முன்பதிவு நடந்திருந்தால், அவர்களின் பணம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.