Manjummel Boys TN Box Office: தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் அடித்து நொறுக்கிய மஞ்சும்மேல் பாய்ஸ்; ரூ.50 கோடியை கடந்து வசூல் சாதனை.!
Manjummel Boys (Photo Credit: @Chrissucess X)

மார்ச் 17, சென்னை (Cinema News): கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி மாவட்டம், எர்ணாகுளம், மஞ்சும்மேல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழு கடந்த 2006ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் நடிகர் கமல் ஹாசனின் குணா திரைப்படம் எடுக்கப்பட்ட கொடைக்கானல் குணா குகையை நேரில் பார்க்க சென்றனர். அச்சமயம், கேரளத்து இளைஞர்களில் ஒருவர் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்தார். அவரை பத்திரமாக மீட்டு இளைஞர்கள் குழு எப்படி கொண்டு வந்தது? அங்கு நடந்தது என்ன? என்ற விஷயத்தை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மஞ்சும்மேல் பாய்ஸ் (Manjummel Boys).

படக்குழுவினர்: சிதம்பரம் இயக்கத்தில், பரவா பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், கணபதி எஸ்.பொடுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், சந்து சலீம்குமார், ஷெபின் பென்சன், மற்றும் விஷ்ணு ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தனர். ஷைஜு காலித் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் எடிட்டிங்கில், சுஷின் ஷ்யாம் இசையில் படம் உருவாகி இருந்தது. கடந்த 22 பிப்ரவரி 2024 அன்று படம் மலையாள மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Gang Attacked Youth: ஹோட்டலில் இளைஞர் மீது துப்பாக்கிசூடு, சரமாரியாக வெட்டிசாய்த்து பயங்கரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

Manjummel Boys (Photo Credit: @CinemawithAP X)

நேரடியாக மலையாள மொழியில் வெளியீடு: அதனைத்தொடர்ந்து, திரைப்படம் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி, அதன் எதிர்பார்ப்பு தமிழகத்திலும் அதிகரித்தது. தற்போதைய சூழலில் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவு சிறந்த படங்கள் வெளியாகவில்லை என்பதாலும், மக்களின் ஆவலை நிவர்த்தி செய்யும் வகையில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மொழிமாற்றம் ஏதும் செய்யப்படாமல் நேரடியாக மலையாள மொழியில் தமிழில் வெளியிடப்பட்டது. படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு, பல திரையரங்குகளில் மக்களின் கூட்டத்தை அலைமோதவைத்தது.

தமிழ்நாட்டில் ரூ.50 கோடியை கடந்து வசூல்: இதனையடுத்து, தற்போது வரை உலகளவில் 175 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ள திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடியை கடந்து இருக்கிறது. மலையாள படத்திற்கு மொழிகள் கடந்து கிடைத்த வரவேற்பு படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படம் வெளியான பின்னர், படத்தில் இடம்பெற்ற கமலின் குணா திரைப்பட பாடல் காட்சிகள், படத்தின் வெற்றிக்கு பிரதானமாகியது. மேலும், படக்குழுவினர் தொடர்ந்து தமிழ்நாட்டில் முகாமிட்டு டிஜிட்டல் வாயிலான விளம்பரங்களை மேற்கொள்ள பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.