மார்ச் 17, புனே (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, ஆலந்தி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் தனவே (வயது 34). இவர் நேற்று இரவு 8 மைக்கு மேல், அங்குள்ள புனே - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஜக்தாம்பா ஹோட்டலில் நண்பர்களுடன் சென்று இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இல்லாத நிலையில், அவினாஷ் மட்டும் தனது நண்பர்களுடன் இருந்தார். அச்சமயம் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று முதலில் அவினாஷை குறிவைத்து துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளது. இதனால் அவரின் வலதுபக்க தலை மற்றும் தொடை ஆகியவற்றில் குண்டு பாய்ந்துள்ளது. Peninsula Volcano Eruption: நகரத்தின் வாயில போல வெடித்துசிதறி வழியும் எரிமலை; ஐஸ்லாந்தில் மக்களை பதறவைக்கும் இயற்கை.!
கண்ணிமைக்கும் நேரத்தில் பரபரப்பு சம்பவம்: துப்பாக்கியால் சுட்ட கும்பலை தொடர்ந்து, சிலர் பயங்கர ஆயுதத்துடன் விரைந்து வந்து அவரை சரமாரியாக வெட்டினர். அவினாஷ் சுடப்பட்டதும் பதறிப்போன அவரின் நண்பர்கள் அங்கிருந்து பதறியபடி தப்பி தள்ளிச்சென்றனர். கும்பல் அவினாஷை மட்டும் தாக்க வந்ததால், வேறு யாரையும் தாக்கவில்லை.கொலைவெறி சம்பவத்தை அரங்கேற்றிய கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்ல, உடனடியாக இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் அவசர ஊர்தி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த இந்தாபூர் காவல் துறையினர், அவினாஷை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலுக்கு ஆபத்தான நிலையில் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Virat Arrived India: போடுடா வெடிய... 'இ சாலா கப் நம்தே' - தாயகம் திரும்பிய விராட் கோலி.. விரைவில் ஆர்.சி.பி அணியுடன் இணைவு.!
அதிகாரிகள் விசாரணை: காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவினாஷ் குற்றப்பின்னணி கொண்ட நபர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவரை முன்விரோதம் காரணமாக வேறு கும்பல் கொலை செய்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தின் பதைபதைப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
#CCTV Video: Fatal Shooting and Stabbing Incident Shakes #Indapur, Young Man Attacked at Hotel Dining Table https://t.co/VaadR9afNW#punecrimenews #hoteljagdamba pic.twitter.com/hJ9phGaabV
— Pune Pulse (@pulse_pune) March 17, 2024