Ram Charan at Siddhi Vinayak Temple: மஹாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராம் சரண்.!

மும்பை வந்தடைந்த ராம் சரணுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கிய நிலையில், சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Ram Charan at Siddhi Vinayak Temple: மஹாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராம் சரண்.!
Actor Ram Charan (Photo Credit: Instagram)

அக்டோபர் 04, மும்பை (Cinema News): தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த சிரஞ்சீவியின் மகன், இந்திய திரையுலகில் (Indian Cinema) முக்கிய நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் ராம்சரண் (Ram Charan).

இவர் தெலுங்கு திரையுலகில் (Telugu Cinema) பிரபல நடிகர் ஆவார். இவருக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். Cloud Burst Sikkim: மேகவெடிப்பு காரணமாக கடும் வெள்ளம்: 23 இராணுவ வீரர்கள் மாயம்.. இந்தியாவே சோகம்.!

இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சர்வதேச அளவில் மாபெரும் வரவேற்பு, வசூல் வெற்றியை குவித்தது. அப்படத்தின் "நாட்டுநாட்டு" பாடல் ஆஸ்கர் விருதையும் பெற்றிருந்தது. ராம்சரணின் மனைவி உபாசனா காமினேனி. சமீபத்தில் தம்பதிகளுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நடிகர் ராம்சரண் சாமி தரிசனம் செய்தார். அவர் மும்பை விமான நிலையம் வந்தபோது, ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இயக்குனர் ஷங்கருடன் தற்போது கேம் சேஞ்சர் (Game Changer) படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார்.

(The above story first appeared on LatestLY on Oct 04, 2023 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).