Visual from Spot (Photo Credit: Twitter)

அக்டோபர் 04, சிக்கிம் (Sikkim): சிக்கிம் நாட்டில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள டெஸ்டா ஆறு (Teesta River). இந்த ஆற்றில் லாச்சேன் வேலி (Lachen Valley) பகுதியில் லஹோனக் ஏரி (Lhonak Lake) இருக்கிறது.

நேற்று ஏரியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, உச்சபட்ச மழை கொட்டி இருக்கிறது. இதனால் ஏரியில் நீர் அதிகரித்து, அதன் கிளை ஆறுகளிலும், டெஸ்டா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. India Gets Gold In 𝗔rchery: வில்வித்தை போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றது இந்தியா: கொரியாவை வீழ்த்தி அபாரம்.! 

எதிர்பாராத இவ்வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையரோரம் வெள்ளம் இரண்டு கரைகளையும் தொட்டபடி ஓடியது. இந்த வெள்ளத்தில் சிக்கி தற்போது 23 இராணுவ வீரர்கள் மாயமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை தேடும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அவர்களுக்கு என்ன ஆனது? வெள்ளத்துடன் அடித்து செல்லப்பட்டனரா? என தெரியவில்லை.