செப்டம்பர் 11, சென்னை (Television News): விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி இங்கு சூப்பர் டூப்பர் ஹிட். 7வது சீசன் முடிந்த கையோடு அடுத்த சீசனிற்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்த முறை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) அறிமுகமாகி இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி (BB Tamil Season 8) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியாளர்கள்: மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் என்று ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில், மாகாபா ஆனந்த், பூனம் பஜ்வா, நடிகர் ரஞ்சித், ஜோயா, குரேஷி, அருண் பாரதி, ஜெகன், டிடிஎஃப் வாசன், ரியாஸ் கான், பிரீத்தி முகுந்தன் என்று பல பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இதில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் செல்வார்கள் என்று தெரியவில்லை. Desingu Raja 2: விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நிறைவு.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்..!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த சீசன்களுக்கான முதல் ப்ரோமோ ஏற்கனவே கடந்த வாரத்தில் வெளியானதை தொடர்ந்து, தற்போது மக்களால் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக அதன் ப்ரொமோ வீடியோவை மக்கள் வெளியிட்டுள்ளனர். ஒன்று அல்ல இரண்டு அல்ல ஒரே நேரத்தில் மாநிலத்தின் 10 இடங்களில் மக்களை வைத்து பிக் பாஸ் 8 ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டது. சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டது.
அதில் இந்த சீசனில் விஜய் சேதுபதியும் புதுசு. அதனால் அதனுடைய ஆட்டமும் புதுசாக இருக்கும் என்ற வகையில் சில பல யோசனைகளை மக்கள் விஜய் சேதுபதிக்கு சொல்லும் விதமாக இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. எப்படியெல்லாம் இருக்க வேண்டும் ?போட்டியாளர்களை எந்த மாதிரி கையாள வேண்டும்? மனதில் ஈரம் இருக்கக் கூடாது. உண்டு இல்லை என வெளுத்து வாங்க வேண்டும் என பல அறிவுரைகளை விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் சொல்லும் மாதிரியாக இந்த ப்ரோமோ வீடியோவில் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் 2வது ப்ரோமோ:
உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா..❤️🔥ஏன்னா, இந்த வாட்டி "ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.." 🔥Bigg Boss Tamil Season 8.. விரைவில்..😎 #VJStheBBhost @VijaySethuOffl #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam pic.twitter.com/hyctRoaNuK
— Vijay Television (@vijaytelevision) September 11, 2024