AR Rahman Hospitalised: நெஞ்சுவலியால் ஏ.ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி; உடல்நிலை அப்டேட்.!

திடீர் உடலநலக்குறைவை எதிர்கொண்ட ஏ.ஆர் ரகுமான் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

AR Rahman (Photo Credit: Wikipedia)

மார்ச் 16, ஆயிரம் விளக்கு (Cinema News): இசைப்புயல் என்று ரசிகர்களால் வருணிக்கப்படும் ஏ.ஆர் ரஹ்மான், தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 90-களில் தொடங்கி, இன்று வரை ஏஆர் ரகுமான் பலநூறு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இசைப்பணியாக தேசிய அளவிலான பல உயரிய விருதுகளையும், ஆஸ்கர் விருதையும் பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாயிரா பானு, தனது கணவரை புரிவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். Kaithi 2 Update: விரைவில் கைதி 2? லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் தகவல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.! 

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி:

இந்நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ஏ.ஆர் ரகுமானுக்கு, இன்று லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவரின் உடல் நலத்தினை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைந்து குணமாக வேண்டி ஏஆர் ரகுமானின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினும், ரகுமானின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவரின் உடல்நலம் தற்போது முன்னேறி வரும் நிலையில், விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுமானின் உடல்நலம் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement