
மார்ச் 15, சென்னை (Cinema News): இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், சாம் சிஎஸ் (Sam CS) இசையில், டிரீம் வாரியார் & விவேகானந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில், கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி (Kaithi). ரூ.25 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், மக்களிடம் மொழிகள், நாடுகள் என்ற தடையை கடந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதன் வாயிலக ரூ.100 கோடியை கடந்து வசூலும் செய்து சாதனை புடைத்திருந்தது. டில்லி என்ற கதாபாத்திரத்தில் கைதியாக நடித்திருந்த கார்த்திக், ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருந்தார்.
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்:
ஆனந்த விகடன், நார்வே தமிழ் திரைப்பட விருதுகள், ஜீ விருதுகள் ஆகியவற்றை வாங்கி குவித்த கைதி திரைப்படம், 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து இருந்தது. கைதி திரைப்படத்தின் தாக்கம் விக்ரம், லியோ என தொடர்ந்து, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸுக்கு (Lokesh Cinematic Universe) மிகப்பெரிய காரணமாக அமைந்தது. Good Bad Ugly Teaser Making Video: குட் பேட் அக்லீ படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ; ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்த படக்குழு.!

கைதி 2 எதிர்பார்ப்பு:
கைதி படத்தின்போதே, இரண்டாவது பாகத்துக்கும் சமிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால், லோகேஷ் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ என படங்களை இயக்கி வழங்கினார். இதில் விக்ரம் மற்றும் லியோ படங்கள் எல்சியு எனப்படும் லோகேஷின் யூனிவர்சில் வருகிறது. தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை இயக்கி வரும் லோகி, கூலி படத்தின் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்து கூலி வெளியீடுக்கு பின்னர், கட்டாயம் கைதி 2 என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒன்றிணைந்த கூட்டணி:
இந்நிலையில், இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் கார்த்திக், இயக்குனர் லோகேஷுக்கு பரிசு அளித்தார். அப்போது, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உடன் இருந்தார். இதனால் நீண்ட எதிர்பார்ப்புடன் இருக்கும் கைதி 2 திரைப்படத்தில், இவர்கள் மூவரும் இணைந்து பணியாற்றவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. விரைவில், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கைதி 2 படத்தினை டிரீம் வாரியஸ் பிக்சர்ஸ், கேவிஎன் ப்ரொடெக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்து வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது.