Nayanthara Beyond the Fairy Tale: நடிகை நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம்: ட்ரைலர் வெளியீடு; லிங்க் உள்ளே.!

பல கஷ்டங்களில் உலகமே தன்னை தூற்றினாலும், அதனை மனதைரியத்துடன் எதிர்கொண்டு இன்று லேடி சூப்பர்ஸ்டாராக கவனிக்கப்படும் நயன்தாராவின் வாழ்க்கை குறித்த படம் நெட்பிளிக்ட்ஸில் வெளியாகிறது.

Nayanthara Beyond the Fairy Tale: நடிகை நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படம்: ட்ரைலர் வெளியீடு; லிங்க் உள்ளே.!
Nayanthara: Beyond The Fairy Tale (Photo Credit: YouTube)

நவம்பர் 09, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மூத்த நடிகையான நயன்தாரா, மலையாள மொழியில் அறிமுகமாகி பின் தமிழுக்கு சரத் குமாருடன் அய்யா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இப்படம் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதேபோல, அதே ஆண்டில் நடிகர் ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படத்தின் வாயிலாகவும் கவனம் பெற்றார். இந்த இரண்டு படங்களும் இன்று வரை தமிழ் திரையுலகில் இரண்டு நடிகர்களின் மிகவும் கவனிக்கத்தக்க படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. 

காதல் திருமணம் குழந்தைகளுடன் வாழ்க்கை:

அடுத்தடுத்த பல வெற்றிகளை கண்ட நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உட்பட பலருடன் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராகவும் அறியப்பட்டார். தமிழகத்தில் இவருக்கென உருவாகிய ரசிகர் பட்டாளம், அவருக்கு என கோவிலையும் ஏற்படுத்தியது. மக்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்ற நயன்தாரா, தொடர்ந்து இன்றளவும் பல படங்களில் நடிக்கிறார், அதனை தயாரித்தும் வழங்குகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம்பிடித்த நடிகை, தற்போது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

வாழ்க்கை அனுபவத்தின் ஆவணப்படம்:

என்னதான் இன்றளவில் மிகப்பெரிய நடிகையாக நயன்தாரா இருந்தாலும், அவரின் திரைப்பட வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற - இறக்கங்கள், எதிர்மறை விமர்சனங்கள் ஏராளம். பல கஷ்டங்களுக்கு நடுவே தனது திரைப்பட வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் திறம்பட வெற்றிகண்ட இருக்கிறார். அவரின் திருமண வீடியோ வெளியீடு உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது அவரின் வாழ்க்கை தொடர்பான அனுபவம் குறித்த ஆவணப்படம் நவம்பர் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா: பியாண்ட் தி பைரி டேல் ட்ரைலர்:

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).