Jailer 2 Update: ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பு; ரஜினி ரசிகர்களுக்கு தயாராகும் இன்ப அதிர்ச்சி.!
நெல்சனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததைத்தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 28, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், தொடர்ந்து திரையுலகில் தனது வெற்றிகரமான பயணத்தை அமைத்து இருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் (Jailer) படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்து, ரூ.600 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. DJ Arrested: லிவிங் டுகெதர் வாழ்க்கையால், தமிழ் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. டிஜே கைது.!
மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் (Jailer 2):
இதனிடையே, இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கின்றனர். இதற்கான ப்ரோமோ சூட் இன்று நடைபெறுவதாகவும், ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12, 2024 அன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார் என மலையாள, கன்னட சூப்பர்ஸ்டார்களும் இணைந்து இருந்தனர். இதனால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்தது.
டைகர் முத்துவேல் பாண்டியன் விரைவில் வருகிறார்:
Tiger Muthuvel Pandian arrives in style on December 12 2024 with Marana mass #Jailer2 announcement .
December 5 promo shoot gonna happen set work in progress
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥#Rajinikanth | #SuperstarRajinikanth | #Superstar @rajinikanth pic.twitter.com/yfAszWO1Nh
— Suresh balaji (@surbalutwt) November 28, 2024
ஜெயிலர் முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள்:
Tiger Muthuvel Pandian arrives
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 https://t.co/PB8LzZcGFp pic.twitter.com/CJY6soAjLp
— Suresh balaji (@surbalutwt) January 21, 2024
(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

