Animal Movie Nee Vaadi Song: அனிமல் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ரன்பீர் - ரஷ்மிகாவின் முத்த காட்சிகளால் கொஞ்சும் ரசிகர்கள்.!
முத்தங்கள் நிறைந்த காட்சிகளை கொண்ட முதல் பாடலாக, அனிமல் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. காதல் ஜோடிகளிடையே வரவேற்பை பெறும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 11, மும்பை (Cinema News): சந்தீப் ரெட்டி வாங்கா (Sandeep Reddy Vanga) இயக்கத்தில், டி-சீரிஸ் (T-Series) தயாரிப்பில், ப்ரீதம், விஷால் மிஸ்ரா, ஜானி ஆகியோரின் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல் (Animal).
இப்படத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர் (Ranbir Kapoor), ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), பேபி டோல், அணில் கபூர், சக்தி கபூர், ராகுல் சவுதாரி, பாகிம் பாசில் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
ஆக்சன்-திரில்லர் படமாக உருவாகியுள்ள அனிமல் திரைப்படம், ஹிந்தி தவிர்த்து தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. ரூ.100 கோடி பொருட்செலவில் படம் தயாராகியுள்ளது. Gurpatwant Pannu Warning To India: "பஞ்சாபை காலிஸ்தான் நாடாக அறிவிக்கவில்லை என்றால் தாக்குதல்" - காலிஸ்தானிய பயங்கரவாதி இந்தியாவுக்கு எச்சரிக்கை.!
டிசம்பர் 01, 2023 அன்று படம் திரையரங்கில் வெளியாகிறது. ஆகஸ்ட் மாதமே திரையரங்கில் வெளியாகவேண்டிய அனிமல் திரைப்படம், இறுதிக்கட்ட பணிகள் தாமதமானதால் டிசம்பருக்கு தள்ளிப்போனது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் நீ வாடி (ஹிந்தியில் Hua Main) என்ற பாடல் காட்சிகளுடன் வெளியாகி இருக்கின்றன. 2 நிமிடம் 43 வினாடிகள் உள்ள பாடலில், நாயகன்-நாயகி முத்தக்காட்சிகளே அதிக இடம் பிடித்துள்ளன.
காதல் ஜோதியிடம் இப்பாடல் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு ரொமாண்டிகை நுணுக்கமாக படக்குழு கையாண்டு இருக்கிறது.
தமிழில் அப்பாடலை (Animal Movie Tamil Song Nee Vaadi) கேட்டு ரசிக்க இங்கு அழுத்தவும்: 👇
ஹிந்தி மொழியில் HUA MAIN பாடலை கேட்டு ரசிக்க இங்கு அழுத்தவும்: 👇
(The above story first appeared on LatestLY on Oct 11, 2023 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

