Animal Fame Save Girl Life: தற்கொலைக்கு முயன்ற சிறுமியின் உயிரை துணிச்சலுடன் செயல்பட்டு காப்பாற்றிய அனிமல் பட நடிகர்: குவியும் பாராட்டுக்கள்.!
உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த சிறுமியை நொடியில் பாய்ந்து உயிரை காப்பாற்றிய அனிமல் பட நடிகரின் செயல் காலம் கடந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
ஜனவரி 06, பஞ்சாப் (Cinema News): கடந்த டிசம்பர் 1 அன்று உலகளவில் வெளியாகி ஏகபோக வரவேற்பு பெற்ற இந்தி திரைப்படம் அனிமல் (Animal). ரூபாய் 100 கோடி செலவில், சந்திப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூபாய் 900 கோடி வசூல் செய்தது. ஓடிடி, தொலைக்காட்சி உரிமை என படம் ரூ.1000 கோடியை கடந்து இலாபம் தந்தது.
நடிகர் - நடிகைகள்: இப்படத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், அணில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி டியோல், திர்ப்தி திம்ரி உட்பட பலர் நடித்து இருந்தனர். படத்தில் இடம்பெற்ற கவர்ச்சி காட்சிகளுக்கு வரவேற்பு, எதிர்ப்பு என படம் விமர்சனத்தை எதிர்கொண்டாலும், வசூல் வேட்டையை படக்குழு மற்றும் படத்தயாரிப்பு குழு கொண்டாடியது. Lorry - Auto Rickshaw Crash: ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து: பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலி.. ஆத்திரத்தில் லாரியை கொளுத்திய மக்கள்.!

நடிகர் மஞ்சோத் சிங்: ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஐமேக்ஸ் தரத்திற்கு படம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் நடிகர் ரன்பீர் கபூரின் சகோதரர் கதாபாத்திரத்தில், மஞ்சோத் சிங் (Manjot Singh) என்பவர் நடித்திருந்தார்.
உயிரை காப்பாற்றிய நடிகரின் வீடியோ வைரல்: இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயன்ற சிறுமி ஒருவரை துணிச்சலாக காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சிறுமியின் உயிரை காப்பாற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Jan 06, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

