ஜனவரி 06, மஹபூப் நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப் நகர் மாவட்டம், பாலா நகர், சௌராஷ்டிரா பகுதியில் நேற்று மாலை ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை ஒன்றும் விபத்தில் பலியானது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிகொள்ளவே, விரைந்து வந்த அதிகாரிகள் மக்களை கட்டப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. Hollywood Actor Died: விமானம் கடலில் விழுந்து நொறுங்கி சோகம்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் உட்பட 4 பேர் மரணம்..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)