டிசம்பர் 03, பாங்காக் (Cinema News): ரஷ்ய நாட்டை சேர்ந்த நடிகை கமிலா பெல்யட்ஸ்கயா (Kamilla Belyatskaya), தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தாய்லாந்து சென்றிருந்தார். அவர், அங்குள்ள கோ சாமுய் (Koh Samui) கடற்கரையில் லாட் கோ வியூ பாயின்ட்டுக்கு சென்று யோகா செய்து கொண்டிருந்தார். அப்போது, ராட்சத அலை எழும்பி அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்த அவரது காதலன் அதிர்ச்சியடைந்தார். Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding: களைகட்டும் நாக சைதன்யா-சோபிதா திருமணம்.. மெழுகு பொம்மையாக ஜொலிக்கும் மணப்பெண்..!
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பற்ற முயன்றனர். இருப்பினும், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவருடைய உடல் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 24 வயதான நடிகை கமிலா யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலை அவரை இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நடிகை பலி:
🇹🇭ACTRESS KILLED BY GIANT WAVE DURING YOGA SESSION
A 24-year-old Russian actress's peaceful yoga session took a tragic turn when a massive wave swept her off a scenic Thai cliff.
Kamilla Belyatskaya was meditating on Koh Samui island despite monsoon warnings when a 9-foot wave… pic.twitter.com/T1OzZgrdJK
— Mario Nawfal (@MarioNawfal) December 2, 2024