Sobhita Dhulipala & Naga Chaitanya (Photo Credit: Instagram)

டிசம்பர் 02, ஹைதராபாத் (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கச்சென்று பின்னாளில் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சமந்தா (Samantha). திருமணம் முடிந்த 3 ஆண்டுகளுக்கு பின், தம்பதிகள் தங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் புரிவதாகவும் அறிவித்தனர்.

சைதன்யா - சோபிதா தம்பதி திருமணம்:

இதனையடுத்து, தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வந்த நடிகர் நாக சைதன்யா, 3 ஆண்டுகள் திருமணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார். இதனிடையே, நாக சைதன்யாவும், பிரபல நடிகையும் சோபிதா துளிபலாவும் (Sobhita Dhulipala) திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் திருமண நிச்சயம் தனிப்பட்ட முறையில் எளிமையாக நடைபெற்றது. இருவருக்கும் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. Bigg Boss Tamil Season 8: இந்த வார கேப்டன்சி டாஸ்க்கை வென்ற ஜெஃப்ரி.. நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!

முழுக்க முழுக்க தெலுங்கு சம்பிரதாயம்படி திருமணம் ஆனது நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் ஹல்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நலங்கு முடிந்த பிறகு வளையல் போடும் நிகழ்ச்சியும் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வளையல் போடும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக காணப்பட்டார். சைதன்யா சோபிதா திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், திரைப்பட மற்றும் அரசியல் பிரமுகர்கள் என மொத்தம் 300 பேர் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

நாக சைதன்யா - சோபிதாவின் வளையல் போடும் நிகழ்ச்சி போட்டோஸ்:‌

 

View this post on Instagram

 

A post shared by Sobhita (@sobhitad)