Tiger 3 Trailer: சல்மான் கானின் டைகர் 3 படத்தின் டிரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ரூ.300 கோடி பொருட்செலவில், டைகர் நாயகன் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது.
அக்டோபர் 13, மும்பை (Cinema News): மணீஷ் ஷர்மா இயக்கத்தில், ரூ.300 கோடி பொருட்செலவில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் (Yash Raj Films) தயாரிப்பில், ப்ரீதம் இசையில் அட்டகாசமான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3 (Tiger 3).
இப்படத்தில் சல்மான் கான் (Salman Khan), கத்ரினா கைப் (Katrina Kaif), இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, ரிதி தோக்ரா, விஷால் ஜெத்சவா, குமுந்த் மிஸ்ரா, ரன்வீர் ஷோரேவ், ஆனந்த் விதார், வரீந்தர் சிங் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். ஷாருக்கான் (Shah Rukh Khan) சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். UP Businessman Shot Dead: கண்ணிமைக்கும் நேரத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட தொழிலதிபர்..!
சமீபத்தில் இப்படத்தின் டீசர் காட்சிகளும் வெளியாகின. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படத்தில், சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். அதேபோல, சல்மான் கானின் படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார்.
படம் தீபாவளி 2023 பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் 16 அக். அன்று மதியம் 12:00 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் சல்மான் கான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Oct 13, 2023 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

