அக்டோபர் 13, ஜாஉன்பூர் (Social Viral): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜாவுன்பூர் (Jaunpur, Uttar Pradesh) மாவட்டம், மடியாயு பகுதியை சேர்ந்தவர் குட்டு சிங் (Guddu Singh). இவர் அப்பகுதியில் தொழிலதிபராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று குட்டு சிங், சாலையில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு இருந்த இளைஞர், திடீரென யாருக்கும் எதிர்பாராத நேரத்தில் துப்பாக்கிசூடு நடத்தினர்.
குட்டு சிங்கை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அவருக்கு மிக அருகில் யாருமே எதிர்பார்க்காத வேலையில் தாக்குதல் நடத்தாட்டது. இந்த சம்பவத்தில் குட்டு சிங் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். Delhi Air Quality: டெல்லி மக்களை பதறவைத்த காற்றின் தரம்; மிகவும் மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!
துப்பாக்கியால் குட்டு சிங்கை சுட்ட இளைஞர் தப்பி செல்லவே, அவருடன் இருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குட்டு சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. குற்றவாளியான அபிஷேக் யாதவ் என்ற இளைஞரை அதிகாரிகள் கைது செய்ய சென்றபோது, அவர் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினார்.
இதனையடுத்து, அதிகாரிகள் பாதுகாப்பு கருத்தில் பதில் தாக்குதல் நடத்தி, அபிஷேக் யாதவை சுட்டுப்பிடித்து கைது செய்தனர். தற்போது அபிஷேக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தொழிலதிபரின் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Main accused Abhishek Yadav was held in encounter: Ajay Pal Sharma, SP Jaunpur pic.twitter.com/N7kkhm70G8
— Piyush Rai (@Benarasiyaa) October 13, 2023