SK 21 Updates: காஷ்மீரில் 75 நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த SK 21 படக்குழு: சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் புகைப்படம்.!

மாவீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, SK21 படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசன் தயாரித்து வெளியிடுகிறார். இந்த நிலையில் SK 21 படக்குழுவினர் காஷ்மீரில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

SK 21 Updates: காஷ்மீரில் 75 நாள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த SK 21 படக்குழு: சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் புகைப்படம்.!
SK 21 Team in Kashmir (Photo Credit: Twitter)

செப்டம்பர் 01, சென்னை (Cinema News): சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், மாவீரன் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் சுவாரசியமான  நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கமர்ஷியல் அம்சங்களுடன் சமூகத்திற்கு தேவையான விஷயங்களும் இடம்பெற்று இருந்ததால் இந்தப் படம்  ஹிட்டானது. விமர்சன ரீதியில் மட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் படம் வெற்றி பெற்றது.

மாவீரன் படத்தில் நடிக்கும் போதே சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தில் நடிப்பதற்கு கமிட் செய்துவிட்டார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தை உலகநாயகன் கமலஹாசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். Toll Prices Hiked: நள்ளிரவில் அமலுக்கு வந்த விலை உயர்வு: மிரள வைக்கும் சுங்கச்சாவடி கட்டணங்கள்.!

இந்தப் படம் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்படும் படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியது. ஆனால் அங்கு ஏற்பட்ட சிக்கல்களால் படக்குழு தமிழகத்திற்கு திரும்பியது.

ஆனால் இரண்டாவது முறை படக்குழுவினர் தெளிவாக  திட்டமிட்டுச் சென்றதால் காஷ்மீரில் 75 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்தனர். அதை கொண்டாடும் வகையில் தற்போது சமூக வலைதளங்களில்  புகைப்படங்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Sep 01, 2023 10:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).