Toll booth (Photo Credit : Pixabay)

செப்டம்பர் 1, சென்னை (TamilNadu News): நாடு முழுவதிலும்  மொத்தம்  816 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் முதன்மையான 27 சுங்கச்சாவடிகளில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் நேற்று நள்ளிரவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள  திருச்சி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி, சமயபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. Important Deadlines in September 2023: இம்மாதத்தில் அரசு அறிவித்த காலக்கெடு நடவடிக்கைகள் என்னென்ன?.. இறுதி நாட்களை தவறவிட்டுடாதீங்க மக்களே.!

ஐந்து ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 65 ரூபாய் வரை நேற்று சுங்கச்சாவடிக்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கார்களுக்கு ரூபாய் 50 மற்றும் பேருந்துகளுக்கு ரூபாய் 175 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிக சக்கரங்கள் உடைய லாரிகளுக்கு ரூபாய் 20-40 வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே உணவு தானியங்கள்  மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு பணிகள் எதையும் செய்யாமல் ஆண்டுதோறும் சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்துவது எந்த வகையில் நியாயம் என்று  வாங்குன ஓட்டிகள் தங்கள் கோபத்தை  வெளிப்படுத்துகின்றனர்.