Aranmanai 4 Update: அப்படிப்போடு.. திகில் காட்சிகளுடன் சிரித்து மகிழ தயாரா?.. அரண்மனை 4 வெளியீடு தேதி அறிவிப்பு.!

3 பாகங்களில் மக்களை மிரளவைத்த சுந்தர் சி, இம்முறை தனது பாணியில் மீண்டும் மக்களை பதறவைக்கும் வகையில் அரண்மனை 4ம் பாகத்தை இயக்கி இருக்கிறார்.

Aranmanai 4 Update: அப்படிப்போடு.. திகில் காட்சிகளுடன் சிரித்து மகிழ தயாரா?.. அரண்மனை 4 வெளியீடு தேதி அறிவிப்பு.!
Aranmanai 4 (Photo Credit: @ChricSucess X)

மார்ச் 27, சென்னை (Cinema News): திகில் காட்சிகள் கொண்ட பேய் திரைப்படங்களுக்கு, தமிழில் எப்போதும் வரவேற்பு என்பது அதிகமாக இருக்கும். அந்த வகையில், சுந்தர் சி-யின் இயக்கம் மற்றும் நடிப்பில் மூன்று பாகங்களாக அரண்மனை திரைப்படம் வெளியாகி, முதல் இரண்டு பாகங்கள் மெகா ஹிட் அடித்தது. மூன்றாவது பாகம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, குறைந்த அளவிலான வரவேற்பை பெற்றது. Lava O2 Smartphone: பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற, லாவாவின் ஓ2 ஸ்மார்ட்போன்; சிறப்பம்சங்கள், விலை நிலவரம் என்ன?..! விபரம் இதோ.! 

அரண்மனை 4 பாகம்: இந்நிலையில், தற்போது அரண்மனை திரைப்படத்தின் 4வது பாகம் வெளியாகவுள்ளது. காமெடி மற்றும் திகில் நிறைந்த கதை அம்சத்துடன் சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் தயாராகியுள்ள அரண்மனை 4 திரைப்படம், அவரின் மனைவி குஷ்பூவின் அவிணி சினிமேக்ஸ் நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்படுகிறது. பென்னி ஓலிவர் எடிட்டிங்கில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இப்படம், 11 ஏப்ரல் 2024 அன்று திரைக்கு வருகிறது. Money Recovered from Washing Machine: ரெய்டில் அதிரடி காட்டிய அமலாக்கத்துறை; வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.2.54 கோடி பறிமுதல்.! 

நடிகர்-நடிகைகள்: இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, ராஜேந்திரன், சிங்கம் புலி, டெல்லி கணேஷ் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து கேரளாவின் கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்று, ஏப்ரல் 11ஆம் தேதி திரைக்கு வருகிறது.

(The above story first appeared on LatestLY on Mar 27, 2024 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).