Lava O2 Smartphone (Photo Credit: @LavaMobiles X)

மார்ச் 27, புதுடெல்லி (New Delhi): இந்தியர்களின் மனதில் பட்ஜெட் விஷயத்தில் பிடித்த ஸ்மார்ட்போனாக இருப்பது லாவா (Lava Mobiles). பட்டன் மாடலில் தொடங்கி, ஸ்மார்ட்போன் வரை லாவா நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனால் அதன் சந்தையும் இந்தியாவில் தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. இன்று லாவா தனது ஓ2 (Lava O2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை அமேசான் விற்பனை தளத்தில் நேரடியாக தொடங்கி இருக்கிறது. Fake 20 Rupees Coin: ரூ.20 இலட்சம் மதிப்பிலான ரூ.20 நாணயங்கள் அச்சடிப்பு; யூடியூப் பார்த்து இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.! 

லாவா ஓ2 சிறப்பம்சங்கள்: 8 ஜிபி ரேம் 128 ஜிபி ரோம், 50 எம்பி ஏஐ கேமிரா, 8 எம்பி செல்பி கேமிரா, 90 Hz 16.55 செமீ (6.5 இன்ச்) எச்.டி டிஸ்பிளே, T616 ப்ராசஸர்,18w பாஸ்ட் சார்ஜர் ஆகிய திறன்கள் சிறப்பம்சமாக லாவாஓ2-வில் இடம்பெற்றுள்ளன. ஏஜி க்ளாஸ் பேக் அமைப்புடன், அரோரா டிசைனில் தயாரிக்கப்பட்டுள்ள ஓ2 மாடல், 5000 mAh பேட்டரி திறனுடன் வழங்ப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் சார்ஜ் பயனருக்கு சிறந்த மொபைல் செல்பாட்டுக்கு உதவும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், பேஸ் & பிங்கர் அன்லாக் பாதுகாப்பு அமைப்பும் இடப்பெற்றுள்ளது.

விலை நிலவரம் இதோ: இம்பீரியல் கிரீன், மெஜஸ்டிக் பர்பிள், ராயல் கோல்ட் ஆகிய நிறங்களில் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது. 2 சிம் 1 மெமரி கார்டு சேர்த்துக்கொள்ளும் வசதி, டைப் சி சார்ஜிங் கேபிள், 4ஜி நெட்ஒர்க் வசதி, 512GB வரை மெமரியை நீடித்துக்கொள்ளும் திறன், 2 மணிநேரம் சார்ஜ் போட்டால் 38 மணிநேரம் தொடர்ந்து அதனை பயன்படுத்தும் தன்மை, குறைந்த எடை ஆகியவை இதன் பிற அம்சங்கள் ஆகும். அமேசான் தளத்தில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ள இதன் தொடக்க விலை வெளியீடு சிறப்பு விற்பனைக்காக ரூ.7,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.