Actress Bindu Ghosh Passed Away: நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
சென்னையில் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ், உடல் நலக்குறைவு காரணமாக தனது 76 வயதில் காலமானார்.
மார்ச் 17, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் (Actress Bindu Ghosh) காலமானார். 76 வயதான இவர், கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பின் காரணமான உடல்நல பாதிப்புகளாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல்வேறு பிரச்சனைகளால் மருத்துவ செலவுக்கு பணமின்றி சிரமப்பட்டார். இதனையறிந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவி செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 16) மதியம் 2 மணிக்கு காலமானார். இதனை அவரது மகன்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். AR Rahman Hospitalised: நெஞ்சுவலியால் ஏ.ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி; உடல்நிலை அப்டேட்.!
நடிகை பிந்து கோஷ் மரணம்:
தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கலந்த துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிந்து கோஷ். ரஜினி, கமல், சிவாஜி கணேசன், மோகன், பிரபு, கார்த்திக் என அனைவருடனும் நடித்துள்ளார். இவர், ‘கோழி கூவுது’ படம் மூலம் அறிமுகமாகி, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ உள்ளிட்ட பல படங்கள் நடித்து பிரபலமானார். சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று (மார்ச் 17) இறுதிச்சடங்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

