
மார்ச் 16, ஆயிரம் விளக்கு (Cinema News): இசைப்புயல் என்று ரசிகர்களால் வருணிக்கப்படும் ஏ.ஆர் ரஹ்மான், தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 90-களில் தொடங்கி, இன்று வரை ஏஆர் ரகுமான் பலநூறு படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இசைப்பணியாக தேசிய அளவிலான பல உயரிய விருதுகளையும், ஆஸ்கர் விருதையும் பெற்று இருக்கிறார். கடந்த ஆண்டு ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாயிரா பானு, தனது கணவரை புரிவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். Kaithi 2 Update: விரைவில் கைதி 2? லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் தகவல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி:
இந்நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த ஏ.ஆர் ரகுமானுக்கு, இன்று லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவரின் உடல் நலத்தினை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைந்து குணமாக வேண்டி ஏஆர் ரகுமானின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினும், ரகுமானின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவரின் உடல்நலம் தற்போது முன்னேறி வரும் நிலையில், விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரகுமானின் உடல்நலம் தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு:
இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!
— M.K.Stalin (@mkstalin) March 16, 2025