Dharsha Gupta: இளைஞர்களின் கனவுக்கன்னி.. பிக் பாஸ் இல்லத்திற்குள் தர்ஷா குப்தா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

பல தடைகளை தாண்டி திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகைகளில் ஒருவரான தர்ஷா குப்தா பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்துள்ளார்.

Dharsha Gupta: இளைஞர்களின் கனவுக்கன்னி.. பிக் பாஸ் இல்லத்திற்குள் தர்ஷா குப்தா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Dharsha Gupta | Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @Simp_ly_exist X)

அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அளவிலான பிரபலம் ஆவார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை, சீரியலில் அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகியவற்றிலும் நடித்துள்ளார். Bigg Boss Season Tamil 8: யாருமே எதிர்பார்க்கல.. முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தார் பேட் மேன் ரவீந்திரன்., இரண்டாவதாக சாச்சனா..! 

தர்ஷா குப்தா (Dharsha Gupta) பற்றி சுருக்கமாக:

திரைப்படங்களில் கதாநாயகி, சீரியலில் வில்லி என இளைஞர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்த தர்ஷா குப்தா, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா, வீட்டின் செல்லப்பிள்ளை ஆவார். ஜாலியான, பேசிக்கொண்டே இருக்கும் குணம் கொண்ட நடிகை தர்ஷா, எப்போது நேர்மறையான எண்ணத்தை பரப்புவர். ஆசிரியராக வேலை பார்த்து வந்த தர்ஷா குப்தா, சென்னைக்கு வந்து பின்னாளில் பிரபலமாக தொடங்கி இருக்கிறார்.

பல கனவுடன் சென்னைக்கு வந்தவர், எதிர்பாராத விதமாக சீரியலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி, இன்று படங்களில் நடித்துள்ளார், நடிகையாகவும் உயர்ந்துள்ளார். ஊரடங்கால் முடங்கிக்கிடந்த பலரையும் ரீல்ஸ், புகைப்படம் பதிவிட்டு பிரபலமான நபர்களில் இவரும் முக்கியமானவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் இடம்பெற்று மக்களின் மனதை கவர்ந்து இருந்தார். நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என இருப்பேன். நான் கொஞ்சம் எமோஷனல் ஆன பெண். சிரித்துக்கொண்டே கலாய்க்கும் குணமும் என்னிடம் உண்டு என கூறும் நடிகை, வெற்றிக்காக மக்களின் அங்கீகாரத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

தர்ஷா குப்தாவின் புகைப்படத்திற்கு லைக் கொடுத்து ஆதரவு வழங்கியவர்கள், இங்கும் ஆதரவை வழங்குவார்கள் என நம்பப்படுகிறது.

தர்ஷா குப்தாவின் என்ட்ரி வீடியோ உங்களின் பார்வைக்கு:

(The above story first appeared on LatestLY on Oct 06, 2024 07:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).