Blue Sattai Maran: வந்துருச்சு மக்களே.. நீங்கள் எதிர்பார்த்த புளூசட்டை மாறனின் 'கோட்' பட விமர்சனம் இதோ.. கழுவி ஊத்தி சம்பவம்.!

படத்தின் மேக்கிங், இயக்குனரின் அலட்சியம் போன்ற காரணங்கள் கோட் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நீலச்சட்டை மாறன் கோட் படத்தை விமர்சித்து இருக்கிறார்.

GOAT Review by Maran (Photo Credit: YouTube)

செப்டம்பர் 06, சென்னை (Cinema News): ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் (Venkat Prabhu), யுவன் சங்கர் ராஜா இசையில், ரூ.400 கோடி செலவில் உருவாகியுள்ள திரைப்படம் தி கோட் எனப்படும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆள் டைம் (The Greatest Of All Time The GOAT). இப்படத்தில் நடிகர்கள் விஜய் (Vijay), பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், ஸ்னேகா, லைலா, மீனாக்ஷி சௌதாரி, வைபவ், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், அரவிந்த் ஆகாஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்தில் சிறப்புத்தோற்றத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, ஒய்.ஜி மகேந்திரன், கனிகா ஆகியோரும் நடித்திருந்தனர். சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெறுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் உலகெங்கும் 05 செப் 2024 அன்று திரையரங்கில் வெளியான கோட் திரைப்படம், ரசிகர்களால் கொண்டாட்டத்துடன் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், ஒருசில விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. GOAT FDFS: தளபதியின் 'கோட்'க்கு உண்மையான பலியாட்டை கொண்டு வந்த கூல் சுரேஷ்.. அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள்..!

புளூ சட்டை மாறன் விமர்சனம்:

இந்நிலையில், யூடியூப் விமர்சகர் புளூ சட்டை மாறன், கோட் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை வழங்கியுள்ளார். அந்த வீடியோவில், அவர் கூறியுள்ளதாவது, "அனைவரும் கதையை முன்னதாகவே யூகித்து இருந்தாலும், படத்தின் விசுவல் என்பது மிகவும் தரம் குறைந்து இருக்கிறது. கென்யாவில் நடந்த சண்டையை பார்த்தால், உங்களால் பதிலே சொல்ல முடியாது. உளவுத்துறையில் பணியாற்றுவதாக நாயகனை காண்பித்தாலும், அவர் உளவுத்துறையில் என்ன பணியாற்றினார் என்பதே தெரியவில்லை.

அடிப்படை அதிகாரி சிந்திப்பதை கூட உளவுத்துறை அதிகாரி சிந்திக்கவில்லை. இதனை பார்க்கும்போது துப்பாக்கி படம் எவ்வுளவோ மேல் என்றும் கூறலாம். படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்பது தரமாக இருக்க வேண்டும். மோகன் வில்லனாக சரியாக இல்லை. இரண்டு வில்லனுமே படுமோசம் தான். இந்த படத்தின் உண்மையான வில்லனாக இருந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசை தான். கிளைமேக்சில் மிகப்பெரிய சண்டைக்கு பெரிய அளவிலான பிஜிஎம் பதிவு செய்ய வேண்டும். ஆனால், கமெண்ட்ரி ஓடுகிறது. அதனை கதைக்கும் ஒத்துப்போகாத அளவு இருக்கிறது. தோனிக்கு ஷாட் வைக்கிறார்கள்.

இயக்குனரை கழுவி ஊற்றிய மாறன்:

எதாவது ஒன்றை செய்து படத்தை ஒப்பேத்திவிடலாம் என படத்தை எடுத்து வைத்துள்ளனர். அதற்காக தோனி, தல என பேசி இருக்கிறார்கள். படத்தின் கதையும் பழையது. இதில் புதிதாக சேர்க்க வேண்டும் என இயக்குனர் யோசனை செய்ததுபோல காண்பித்து இருக்கிறார். இயக்குனர் ஸ்க்ரிப் பக்கம் சிந்திக்காமல், தொழில்நுட்ப ரீதியாக சிந்தித்து, அதனை ஹார்டிஸ்கில் கிரேடஸ்ட் ஆப் ஆள் டைம் என எழுதி வைத்து இருக்கிறார்.

இந்த படத்தில் இரண்டு விஜய் எதற்கு? டீ-ஏஜிங் வாய்ப்புக்காக படத்தை மொத்தமாக சொதப்பி இருக்கின்றனர். ஹாலிவுட்டில் எக்ஸ்பெண்டபிள் படம் முதியோருக்கு எடுத்தது இருக்கும். விஜய்க்கு ஆதரவாக வெங்கட் பிரபுவின் பழைய நண்பர்களை வைத்து, மிகப்பெரிய பழைய கதையை, எதிர்பார்ப்பே இல்லாமல் இயக்குனர் கொடுத்து இருக்கிறார். மொத்தமாக படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், படத்தின் கதை பழையது, திரைக்கதை மோசம், படத்தின் வித்தியாசம் என்பது டீ-ஏஜிங். அதுதான் படத்தின் வினையாக அமைந்தது. இந்த படத்தை 3 மணிநேரம் எடுத்து விட்டார்கள். நீங்கள் போய் பார்ப்பது உங்களின் விருப்பம்" என தெரிவித்துள்ளார்.

தமிழ் டால்கிஸ் பக்கத்தில் வெளியான கோட் பட ரிவியூ வீடியோ:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif