Vadivelu Mother Died: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி மரணம்.. காரணம் இதுதான் - உண்மையை உடைத்த வடிவேலு.!
வைகை தந்த காமெடி புயலாக வலம்வந்த நடிகர் வடிவேலுவின் தாய் வயது மூப்பின் காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவரின் மறைவு குறித்து வடிவேலு செய்தியாளரிடையே தகவலை பரிமாறிக்கொண்டார்.
ஜனவரி 19, மதுரை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக இருந்து வந்த வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா இன்று வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அவரின் மறைவை அறிந்த வடிவேலு தாயாரின் மரணம் குறித்து செய்தியை வெளிஉலகிற்கு தெரிவிக்க, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை பதிவு செய்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி நேரில் சென்று தனது இரங்கலை பதிவு செய்தார். தாயின் மரணம் குறித்து நடிகர் வடிவேலு தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபரிடம் பேசினார். Weather Update: 5 நாட்களுக்கு வறண்ட வானிலை, மீனவர்களுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம்.!
அப்போது, அவர் கூறுகையில், "மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தும் நல்ல உடல்நலத்தோடு இருந்தார். நெஞ்சு சளியால் அவர் இறந்துவிட்டார். அவரின் உண்மையான பெயர் சரோஜினி, சிறுவயதில் இருந்து பாப்பா என அவரை அழைப்பார்கள்.
பொங்கல் பண்டிகை வரையில் உறவினர்களை நேரில் அழைத்து பேசிக்கொண்டு இருந்தார். மருத்துவமனைக்கு சென்று வந்து ஊருக்கு செல்லலாம் என இருந்தோம். அதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது" என தெரிவித்தார். வடிவேலுவின் தாயார் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.