Tamil directors approach Telugu actor: டோலிவுட் பக்கம் திரும்பிய தமிழ் இயக்குனர்கள்: சான்ஸ் யாருக்கு என்பது சஸ்பென்ஸ்.!
நடிகர் விஜயை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் அட்லீ மற்றும் நெல்சன் தற்போது விஜயின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால், தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படம் இயக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.
செப்டம்பர் 21, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் அட்லீ மற்றும் நெல்சன் இருவருமே வெற்றி இயக்குனர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். விஜய் படம் தான் இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக இருந்தது.
தெறி, மெர்சல், பிகில் என்று வரிசையாக நடிகர் விஜய் வைத்து ஹிட் கொடுத்தார் இயக்குனர் அட்லீ. அதேபோல நெல்சனும் பீஸ்ட் படத்தில் விஜய் உடன் இணைந்து பணியாற்றினார். Rahul Gandhi Carries Baggage: ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல’: கூலித் தொழிலாளிகளுடன் பெட்டி தூக்கிய ராகுல் காந்தி.!
பிகில் படத்தை தொடர்ந்து பாலிவுட் சென்று நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார் அட்லீ. ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஆயிரம் கோடியை நெருங்கி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது.
அட்லீ மற்றும் நெல்சன் இருவரின் படங்களுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டானதை தொடர்ந்து, இருவரும் அடுத்ததாக விஜயை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டுகின்றனர். விஜய்யிடம் கால்ஷீட் இல்லாததால் இவர்கள் டோலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறார்கள்.
தெலுங்கு திரையுலகில் மாஸ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் அல்லு அர்ஜுனிடம் இருவருமே கதை சொல்லி இருக்கின்றனர். இதில் அல்லு அர்ஜுன் யாருடைய கதையை தேர்வு செய்திருக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. யாரது படத்தை ஓகே செய்தாலும் அதில் அனிருத் இசை தான் இருக்கும் என்று தெரிகிறது.
(The above story first appeared on LatestLY on Sep 21, 2023 08:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

