செப்டம்பர் 21, புது டெல்லி (Political News): காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சிகப்பு உடை அணிந்து, கூலித் தொழிலாளிகளுடன் சேர்ந்து தலையில் பெட்டியை தூக்கி சென்றிருக்கிறார். 53 வயதான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு அங்கிருக்கும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேச சென்றிருக்கிறார்.
சமீபத்தில் ரயில் நிலையத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள், ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் கூறி இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது.
கூலித் தொழிலாளர்கள் ஆரவாரத்துடன் சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்ப, ஒருவர் பெட்டியை எடுத்து ராகுல் காந்தி தலை மேல் வைக்க அதை புன்முறுவலோடு தாங்கி பிடித்து நடந்து சென்றார். Sukha Duneke Killed: இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தானிய பயங்கரவாதி, கனடாவில் சுட்டுக்கொலை: தொடரும் பதற்றம்..!
இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவராக இருக்கும் பி.வி ஸ்ரீனிவாஸ் (B.V Srinivas) தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி பெட்டி தூக்கும் வீடியோவை ஹிந்தி பாடலுடன் இணைத்து வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் ராகுலை ‘மக்களின் கதாநாயகன்’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
"हम चाय पी रहे थे कि तभी 2-3 गाड़ी आकर रुकीं, हमें लगा कोई सवारी होगी जो सामान लेकर आई है। हमें बिलकुल नहीं पता था कि वे राहुल गांधी हैं और हमारे पास आकर बैठ गए"
◆ आनंद विहार पहुंचे कांग्रेस नेता राहुल गांधी पर बोले कुली #RahulGandhi #AnandVihar | Rahul Gandhi in Anand Vihar pic.twitter.com/VX0q2QYvYm
— News24 (@news24tvchannel) September 21, 2023
வயநாடு (Wayanad) எம்.பி ராகுல் காந்தி, இதற்கு முன்பாக பெங்களூரில் டெலிவரி தொழிலாளர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். ஆசாத்பூர் (Azadpur) மண்டியில் காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.