Thalaivar 170 Update: தலைவர் 170 படத்தின் அப்டேட் இதோ... வேட்டையனாகிய சூப்பர் ஸ்டார்..!
Thalaivar 170 (Photo Credit: @LycaProductions x)

டிசம்பர் 12, சென்னை (Chennai): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெய்லர். இந்தப் படத்தின் மூலம் நான் தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்பதனை ரஜினிகாந்த் அடித்து கூறியுள்ளார் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் ஜெயிலர் படம் 600 கோடி வசூல் சாதனை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு, அடுத்த வருடம் பொங்கலுக்கு, மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள 'லால் சலாம்' படம் வெளியாகப் போகிறது.

தலைவர் 170: இதற்கிடையே ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தலைவர் 170 (Thalaivar 170) என்று அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் வீடியோவை ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. BTS Boys Join Military Service: ராணுவத்தில் சேர்ந்த பிடிஎஸ் குழு... அப்போ யூடியூப் என்ன ஆச்சு?.!

வேட்டையனாகிய சூப்பர் ஸ்டார்: இந்த டைட்டில் வீடியோவில் போலீஸ் அதிகாரி போல் லத்தி மற்றும் துப்பாகியுடன் நடுத்தர வயதில் மாஸாக நடந்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், குறி வச்சா இரை விழணும் என்று சொல்வதுடன் முடிகிறது. இப்படத்திற்கு வேட்டையன் (VETTAIYAN) என்று பெயர் வைத்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகைகயில் இந்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படமும் ஜெய்லர் படம் போன்று ப்ளாக்பஸ்டர் தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.