BTS Boys (Photo Credit: @bts_bighit)

டிசம்பர் 12, தென் கொரியா (World News): தென்காரிய நாட்டை சேர்ந்த கே பாப் பாடகர் குழுவான பிடிஎஸ் (BTS) தனக்கென்று உலகம் முழுவதும் ஒரு ஆர்மியை வைத்துள்ளது. அவர்களின் பாடலைக் கேட்க பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ராணுவத்தில்சேர்ந்த பிடிஎஸ்: தென்கொரியாவில் இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் ஆவது பணிபுரிந்து ஆக வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதனைத் தொடர்ந்து கே பாப் பிடிஎஸ் குழுவில் இருக்கக்கூடிய ஏழு பேரும் ராணுவத்தில் இணைந்துள்ளனர். ஏற்கனவே ஜின், ஜே-ஹோப், சுகா அவர்களது ராணுவ பணியை தொடங்கி விட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று RM மற்றும் V அவர்களது ராணுவப் பணியை தொடங்கினர். மீதமுள்ள ஜிமின் மற்றும் ஜங்கூக் இன்று அவர்களது பணிகளை தொடங்கினர். Virat Kohli Anushka Sharma: எல்லையில்லாத காதலில் தவிக்கும் விராட் கோலி: திருமண நாளில் ஜோடியாக ஸ்மார்ட் கிளிக்...!

ரீ என்ட்ரி எப்போது? தற்போது ராணுவ பணியில் இணைந்துள்ள இவர்கள் ஏழு பேரும் மீண்டும் எப்போது யூடியூப் வருவார்கள் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மீண்டும் 2025 ஆம் ஆண்டு தங்களது ராணுவ பணிகளை முடித்துவிட்டு, பாடும் பணியை தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.