Pushpa 2 The Rule Trailer: இன்று மாலை 06:03 மணிக்கு வெளியாகிறது புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்.!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 05, 2024 அன்று வெளியாகிறது. அதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படுகிறது.

Pushpa 2 The Rule Trailer (Photo Credit: @AlluArjun / @PushpaMovie X)

நவம்பர் 17, விசாகப்பட்டினம் (Cinema News): கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், சுனில் ரெட்டி, ஜெகதீஷ் பிரதாப், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலரும் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா (Pushpa: The Rise Part 1). Actress Rita Anchan Dies: பிரபல கன்னட நடிகை ரீட்டா அஞ்சன் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!

செம்மரக்கடத்தல் அரசியல், ரவுடியிசம் படம்:

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக்கடத்தல், அதுசார்ந்த ரவுடியிசம் மற்றும் அரசியலை பின்னணியாக கொண்டு படம் வெளியானது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படத்தின் இரண்டாவது பாகம் (Pushpa 2: The Rule) ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, பின் டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இன்று மாலை புஷ்பா 2 டிரைலர்:

தற்போது படம் டிசமபர் 05 அன்று உலகளவில் வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை படக்குழு செய்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை 06:03 மணியளவில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகின்றன. படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரைலர் காட்சிகளும் பிராந்திய மொழிகளில் வெளியாகின்றன.

புஷ்பா 2 ட்ரைலர் தொடர்பாக அல்லு அர்ஜுனின் ட்விட் பதிவு:

மொழிவாரியாக டிரைலர் வெளியாகும் யூடியூப் பக்கங்கள்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement