GOAT Trailer: "சிங்கம் எப்பவும் சிங்கம்தான்" - வெளியானது விஜய்யின் கோட் பட டிரைலர்..!
தமிழ் திரைப்பட நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
ஆகஸ்ட் 17, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள 'கோட்' (GOAT) திரைப்படத்தின் டிரைலர் (Trailer) தற்போது வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இதில், நடிகர் விஜய், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், பார்வதி நாயர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். National Film Awards: 70வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; பொன்னியின் செல்வன், கே.ஜி.எப், காந்தாரா படங்கள் தேர்வு.!
கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அவர் இசையில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அதில், முதல் பாடலான 'விசில் போடு' பாடல், கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆனது. இதனையடுத்து, 'சின்ன சின்ன கண்கள்' என்கிற மெலடி பாடல் வெளியானது. அப்பாடலை விஜய்யுடன் சேர்ந்து பவதாரணி பாடி இருந்தார். அவரது குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் யுவன்ரங்கர் ராஜா பயன்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது பாடலாக யுவன் சங்கர் ராஜா பாடிய 'ஸ்பார்க்' பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
இப்படம் வருகிற செப்டம்பர் 05-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், தற்போது கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரின் ஆரம்பத்தில் 'அண்ணன் வரார் வழிவிடு' என்று எழுத்துக்களுடன், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் டிரைலர் அசத்தலாக இருக்கிறது. டிரைலரைப் பார்த்த விஜய் ரசிகர்கள் இதனை வைரலாக்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

