Ponniyin Selvan | KGF | Thiruchitrambalam | Kantara Movie Poster (Photo Credit: @labstamil / @CinemaWithAB / @dhanushkraja / @Kothiyann X)

ஆகஸ்ட் 17, புதுடெல்லி (Cinema News): கடந்த 1954ம் ஆண்டு முதல் மத்திய அரசு சார்பில், தேசிய அளவிலான, மொழி வாரியாக சிறந்த திரைப்படங்கள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட திரைத்துறை பணியாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் கண்டறியப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு வெளியான படங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டன.

சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை:

அதன்படி, திரைப்படங்களுக்கான தலைவர் ராகுல் ரவைல், திரைப்படம் அல்லாத படங்களுக்கான தலைவர் நிலா மத்தாப் பண்டா ஆகியோர் தலைமையிலான குழு தங்களின் இறுதி முடிவுகளை அறிவித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 2022ம் ஆண்டில் வெளியான படங்களில் மலையாள மொழியில் வெளியான ஆட்டம் (Aattam) சிறந்த படமாகவும் (Best Feature Film), காந்தாரா (Kantara) படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி (Rishab Shetty) சிறந்த நாயகனவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Thangalaan Movie Review: "தங்க முலாம் பூசப்பட்ட செங்கலே தங்கலான்" - திரைப்பட விமர்சனம் இதோ.! 

முன்னணி பெற்ற பொன்னியின் செல்வன்:

அதேநேரத்தில், தனுஷின் (Dhanush) இயக்கம், நடிப்பில் உருவாகி வெளியான திருச்சிற்றம்பலம் (Thiruchitrambalam) படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் (Nithya Menen) சிறந்த நடிகையாக (Best Actress) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகம் கருக்காதா பாடல் சிறந்த நடன பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டு, அதன் நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் விருதை தட்டிச்சென்றுள்ளார். தமிழ் மொழியில் சோழர்களின் வரலாற்றை மையப்படுத்தி உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் சிறந்த இசை, ஒளிப்பதிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று இருக்கிறது.

சிறந்த கன்னட திரைப்படமாக கே.ஜி.எப்:

சிறந்த ஒளிப்பதிவாளராக பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிய ரவி வர்மன், சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, ஹிந்தியில் வெளியான பிரம்மஸ்திரா திரைப்படத்தின் இசையமைப்பாளர் ப்ரீத்தம், சிறந்த இசையமைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.ஜி.எப் படம் சிறந்த கன்னட திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டதுடன், சிறந்த சண்டைக்காட்சிகளுக்கான விருதை அன்பறிவு தட்டிச்சென்றார்.