Premalatha Vijayakanth Tattoo: கேப்டன் முகத்தை பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!
மறைந்த தனது கணவர் விஜயகாந்த் உருவத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பச்சை குத்திக்கொண்ட கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பிப்ரவரி 05, சென்னை (Chennai): தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். பல நடிகர்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் விஜயகாந்த் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும் விஜயகாந்த் மறைந்தபோது திரை பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளில் இருந்தனர். அதனால் வீடியோ பதிவிட்டு அவர்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கேப்டன் மறைவிற்கு வராத சில நடிகர்கள், நடிகைகள் இன்னும் அவர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். Hydrogen-Powered Electric Scooter: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024.. ஹைட்ரஜன் பவர்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு..!
இந்நிலையில் விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் உருவத்தை தேமுதிக பொதுச்செயலாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் மகிழ்ச்சியாக கையில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் இது பார்ப்போர் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

