Joy e-Bike (Photo Credit: @joy_ebike x)

பிப்ரவரி 05, புதுடெல்லி (New Delhi): தற்போது இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Expo 2024) நடைபெற்று வருகிறது. அதில் வார்ட்விசார்டு இன்னோவேஷன்ஸ் மற்றும் மொபிலிட்டி (Wardwizard Innovations & Mobility) நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமான ஜாய் இ-பைக் (Joy e-Bike) நிறுவனத்தின் ஹைட்ரஜன் பவர்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த பைக் ஹைட்ரஜன் ஃப்யூவலை மின்சாரமாக மாற்றி இயங்கும் திறன் கொண்டது. இந்திய அரசின் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் அவர்களின் கைகளில் புதிய முன்மாதிரி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. Man Tracks Down Thief Using Google Maps: கூகுள் மேப்பை பயன்படுத்தி மொபைல் திருடனை பிடித்த நபர்.. அட்டகாசமான தகவல் இதோ..!

தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது கான்செப்ட் மாடல் ஆகும். இதன் உற்பத்தி பணிகள் , விற்பனை மற்றும் இதன் சிறப்புகள் குறித்த எந்த முக்கிய விபரங்களையும் ஜாய் இ-பைக் அறிவிக்கவில்லை. மேலும் இந்த வாகனத்தை வழக்கமான மின்சார வாகனங்களைப் போல சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதில் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல ஹைட்ரஜன் மையங்களுக்கு சென்று ஹைட்ரஜன் செல்லை நிரப்பிக் கொண்டால் போதும். அதனை மின்சாரமாக மாற்றி அந்த வாகனம் இயங்கிக் கொள்ளும்.