Vikas Sethi Passes Away: பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்க விகாஸ் சேத்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.
செப்டம்பர் 09, மும்பை (Cinema News): பிரபல டிவி சீரியல் நடிகர் விகாஸ் சேத்தி (Vikas Sethi). க்யூன்கி சாஸ் பி கபி பஹு தி (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) சீரியலில் அபிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இந்தி சீரியல்கள் தவிர்த்து படங்களிலும் நடித்து வந்தார் விகாஸ். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சீரியல் சசுரால் சிமர் கா (Sasural Simar Ka). மேலும் கரண் ஜோஹர் இயக்கத்தில் ஷாருக்கான், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான கபி குஷி கபி கம் (Kabhi Kushi Kabhi Gham) படத்தில் ராபி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விகாஸ். Producer Dilli Babu Passes Away: முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!
இந்நிலையில் நடிகர் விகாஸ் சேத்தி சனிக்கிழமை இரவு நாசிக்கில் மாரடைப்பால் தூக்கத்தில் இறந்ததாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 48. அவரின் இறுதிச்சடங்கு இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும், விகாஸ் சேத்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Sep 09, 2024 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

