செப்டம்பர் 09, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு (50). ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி பேனரில், பல வித்தியாசமான படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக ‘உறுமீன்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். TVK Party: தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்தது அங்கீகாரம்; நடிகர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டம்.!
இந்நிலையில், டில்லி பாபு (Tamil Producer Dilli Babu) கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்படுத்து தீவிர சிகிச்சை எடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது. அதில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார். நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும், டில்லி பாபுவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பெருங்குளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.