ஜனவரி 15, ஈவிபி பிலிம் சிட்டி (TV News): விஜய் (Vijay TV) டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 100 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில நாட்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண், தீபக் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். பழைய போட்டியாளர்களை மீண்டும் இல்லத்திற்குள் அனுப்பி வைத்து, போட்டி மாறுபட்ட கோணத்தில் செல்கிறது. Ajith Kumar Racing: துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் வெற்றி; நடிகர் ரஜினி, கமல் வாழ்த்து..!
ஆப்பு வைத்த பிக் பாஸ்:
இந்நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோவில், பெட்டியை எடுத்துக் கொண்டு கொடுக்கும் நேரத்திற்குள் வீட்டிற்குள் வர வேண்டும். இல்லை என்றால் அப்படியே பெட்டியுடன் வெளியோ போக வேண்டியது தான். ஒருவரை வெளியேற்றுவது என பிக் பாஸ் முடிவு (Money Task) செய்துவிட்டார். இதில் 90 மீட்டர்கள் தொலைவினை ராயன் (Rayan) 17 நொடிகளில் வெற்றிகரமாக கடந்தது மட்டும் இல்லாமல், பணப் பெட்டியையும் வெற்றிகரமாக எடுத்து வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
பிக் பாஸ் ப்ரோமோ:
Podu #Raayan 💯💯>>>> #Muthukumaran
Task beast Raayan 📈#BiggBossTamil8 #Soundariya #BiggBoss8Tamil pic.twitter.com/q18Kh5G6cI
— αммυ тнє ∂ινιηє ♥✨ (@am_ammu_divine) January 15, 2025