Rajinikanth | Ajithkumar | Kamal Haasan File Pic (Photo Credit: Wikipedia | @ikamalhaasan X)

ஜனவரி 14, துபாய் (Cinema News): தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமார் (Actor Ajith Kumar), துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். அஜித் குமாரின் அணியான பாஸ் கோட்டனின், ரேசிங் 991 பிரிவில் 3வது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அவர் GT4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் அங்கீகாரத்தையும் அவர் பெற்றார். கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பல திரையுலக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Ajith Kumar Racing: துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் வெற்றி; மனைவியிடம் அன்பை வெளிப்படுத்திய காட்சி வைரல்..!

ரஜினி, கமல் வாழ்த்து:

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் (Actor Rajinikanth) மற்றும் கமல்ஹாசன் (Actor Kamal Haasan) வாழ்த்து தெரிவித்துள்ளனர். துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த், 'வாழ்த்துக்கள் என்னுடைய அன்பு நண்பர் அஜித்குமார்' என பதிவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், 'முதல் பந்தயத்திலேயே அசாதாரண சாதனை புரிந்த, தனது பன்முகத்தன்மை கொண்ட ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய மோட்டார் விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க மற்றும் முக்கியமான தருணமாகும்' என பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து:

கமல்ஹாசன் வாழ்த்து: