Bigg Boss Tamil Season 8: முதல் நாளே பிக் பாஸை டென்ஷனாக்கி, தூக்கியடிக்கப்பட்ட 6 போட்டியாளர்கள்.. அதிரடி சம்பவம்.!

கேட்ட கேள்விக்கு பதில் தராமல், ஆண்கள்-பெண்கள் குழுவாக போட்டிபோட்டுக்கொண்டு பேசியதால் பிக் பாஸ் கடுப்பாகி அனைவரையும் கார்டன் ஏரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

Bigg Boss Tamil Season 8: முதல் நாளே பிக் பாஸை டென்ஷனாக்கி, தூக்கியடிக்கப்பட்ட 6 போட்டியாளர்கள்.. அதிரடி சம்பவம்.!
Bigg Boss Tamil Season 8 | Fight for Bed (Photo Credit: @Rasigan_022 X)

அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 (Bigg Boss Tamil) இன்று முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், போட்டியாளர்கள் அடுத்தடுத்து வீட்டிற்குள் நுழைந்தனர். முதற்கட்டமாக ரவீந்திரன், சத்யா, தீபக், சாச்சனா, ஆனந்தி, தர்ஷா ஆகியோர் பிக் பாஸ் இல்லத்திற்குள் முதல் ஆறு போட்டியாளராக சென்று இருந்தனர். இவர்கள் அனைவரும் முதலில் வீட்டின் கார்டன் அறையில் இருந்தனர். பின் அவர்கள் அனைவரையும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க, யாருக்கு எந்த ரூம்? என அவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஆராயத் தொடங்கினர். Dharsha Gupta: இளைஞர்களின் கனவுக்கன்னி.. பிக் பாஸ் இல்லத்திற்குள் தர்ஷா குப்தா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் குழு:

இந்நிலையில், 2 பெட்ரூம் அறையில், எந்த படுக்கை அறை ஆண்களுக்கு வேண்டும்? எது பெண்களுக்கு வேண்டும்? என பிக் பாஸ் கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் வீட்டிற்குள் சென்ற முதல் 6 போட்டியாளர்களான ரவீந்திரன், சத்யா, தீபக், சாச்சனா, ஆனந்தி, தர்ஷா ஆகியோர் இரண்டு ஆண் - பெண் குழுவாக பிரிந்து தங்களின் கோரிக்கையான பிங்க் நிற படுக்கை கொண்ட அறையை கேட்டிருந்தனர். அனைவரையும் கூடிப்பேசி பிக் பாஸ் ஒரேயொரு முடிவை சொல்லுமாறு கோரிக்கை வைத்த நிலையில், இருதரப்பும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

டென்ஷனாக்கிய போட்டியாளர்கள்:

இதனால் அதிருப்தியடைந்த பிக் பாஸ், வீட்டின் (Bigg Boss Fight) லிவிங் ஏரியாவில் இருந்த 6 போட்டியாளர்களையும், வீட்டில் இருந்து வெளியேற்றி, கார்டனில் ஏற்கனவே அமர்ந்து இருந்த சோபாவில் பேசாமல் அமைதியாக இருக்குமாறும் கூறி வெளியே தூக்கியடித்து அனுப்பி வைக்கப்பட்டனர். முதல் நாளே பிக் பாஸை 6 போட்டியாளர்கள் சேர்ந்து ஒரு முடிவை எடுக்க முடியாமல் டென்ஷனாக்கி இருக்கின்றனர். முதல் நாளே இவர்கள் அனைவரும் நானா? நீயா? எனக்கு-உனக்கு? என போட்டிபோட்டுக்கொண்டு ஆட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆண்கள் - பெண்கள் இடையேயான போட்டியாக இருக்கும் என பிக் பாஸ் கூறியுள்ள நிலையில், வரும் வாரத்தில் அதற்கான போர்க்கொடி கருத்துக்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களிடையே படுக்கை அறையை பங்கிடுவதில் நடந்த விவாதம்:

(The above story first appeared on LatestLY on Oct 06, 2024 08:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).