நவம்பர் 05, மும்பை (Cinema News): சல்மான் கான் (Salman Khan) கடந்த 1998ல் பாலிவுட் படம் ஒன்றின் ஷூட்டிற்காக ராஜஸ்தான் சென்றிருந்த போது, அங்கு அவர் ஒரு வகை கலைமானை (blackbucks) வேட்டையாடியதாகப் புகார் எழுந்தன. இதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த கலைமானை பிஷ்னோய் சமூகத்தினர் தெய்வமாக வழிபடுவார்கள். எனவே, தங்கள் குல தெய்வ கோயிலுக்கு நேரில் வந்து சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் கேங் மிரட்டியது. அவர் இன்னும் மன்னிப்பு கேட்காததால் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சல்மான் கானை குறிவைத்து அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டையும் இந்த கேங் நடத்தியது. Viduthalai Part 2: விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?!
தொடர்ந்து சல்மான் கான் மற்றும் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட என்சிபி தலைவர் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சல்மான் கானுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பிணைத்தொகையாக ரூ. 5 கோடி கேட்டுள்ளார். மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த மிரட்டலில் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.