Bigg Boss Tamil Season 8: சுற்றுப்போடும் போட்டியாளர்கள்; ஜாக்குலின் - சுனிதா பனிப்போர்.. எலிமினேஷனுக்கு பேச வந்து பயங்கர வாதம்.!
அடுத்த எலிமினேஷன் குறித்த கேள்வி எழுந்ததும் ரஞ்சித், ரவீந்தர், சௌந்தர்யா ஆகியோரை நோக்கி அம்புகள் திரும்பியுள்ளன.
அக்டோபர் 08, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டார். Jacqueline Shocked: ரஞ்சித் Vs ரவீந்தர்.. ஆடிப்போன பிக் பாஸ் வீடு; வாடிப்போன ஜாக்குலின்.. நடந்தது என்ன?.!
அதிர்ச்சி தந்த தீபக்:
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என நினைப்போரை போட்டியாளர்கள் காரணத்துடன் சொல்ல பிக் பாஸ் கூறுகிறார். இதற்காக போட்டியாளர்கள் பலரும் ரஞ்சித், ரவீந்திரன், சௌந்தர்யா ஆகியோரை அடுத்தடுத்து வீட்டில் இருந்து வெளியேற்றும் நோக்கில் நாமினேட் செய்கின்றனர். அதே நேரத்தில், ஜாக்குலினை தீபக் நாமினேட் செய்து அதிர்ச்சி அளிக்கிறார். ஜாக்குலினும் அதனை சிவந்த முகத்துடன் ஏற்றுக்கொள்கிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சி பட்டையை கிளப்பப்போகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மனக்கசப்பு?
மேலும், சுனிதா, ஜாக்குலினின் செயல்பாடுகள் காரணமாக மனரீதியான உறுத்தலை எதிர்கொண்ட நிலையில், அவர் எங்கு சென்றாலும் கத்தி-கத்தி பேசி, பிறரை அவமதிப்பதுபோல செயல்பட்டு தன்னை முன்னிலைப்படுத்துவது சரியானதாக எனக்கு தெரியவில்லை. எனக்கு அது பிடிக்கவும் இல்லை என பேசுகிறார். இந்த ப்ரோமோ இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. எஞ்சிய காட்சிகள் இன்று ஒளிபரப்பாகும்போதே பிற சூழல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், எலிமினேஷன் குறித்து சௌந்தர்யா போட்டியாளர்களை ஒன்றாக அமரவைத்து பேசும்போது, அர்னவ் குறுக்கிட்டு அவரிடம் வம்பிழுக்கிறார். இதனால் பிக் பாஸ் வீடு பரபரப்பை சந்திக்கிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் விஜய் டிவி முகங்கள் அதிகம் இருக்கும் நிலையில், அவர்கள் மட்டுமே அங்கு ஆதிக்கம் செலுத்தும் சூழல் உண்டாகியுள்ளது என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஞ்சித், ரவீந்திரன், சௌந்தர்யா ஆகியோருக்கு கட்டம் கட்டும் போட்டியாளர்கள்:
#Day4 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBTamilSeason8 #Disneyplushotstartamil #VijayTelevision pic.twitter.com/LKLZI1LfKv
— Vijay Television (@vijaytelevision) October 10, 2024
அர்னவ் - சௌந்தர்யா இடையே உண்டான வாக்குவாதம்:
#Day4 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/7zlwzvisVK
— Vijay Television (@vijaytelevision) October 10, 2024
சுனிதா ஜாக்குலின் குறித்து பேசிய காட்சிகள்:
#Day4 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/xxudnwZ33K
— Vijay Television (@vijaytelevision) October 10, 2024
(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

