டிசம்பர் 01, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழச்சி, தற்போது 56 வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. பிக் பாஸ் இல்லத்திற்குள் ஆனந்தி, அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்லின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சவுந்தர்யா, தர்ஷிகா, விஷால், ஷிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷா, அர்ணவ், ரவீந்தர் ஆகியோர் இடம்பெற்றனர். Bigg Boss Tamil Season 8: ராணவ் - ரயானால் கலவரமான பொம்மை டாஸ்க்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.., வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
இந்த வார எவிக்சன்:
இவர்களில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா, சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றபட்டனர். அதனைத்தொடர்ந்து, இந்த வாரம் ஒருவர் இன்று (1 டிசம்பர் 2024) வெளியேற்றபடவேண்டும் என்ற நிலையில், பிக் பாஸ் பொம்மை டாஸ்க் கொடுத்து இருக்கிறார். சினி வட்டாரங்கள் கொடுக்கும் தகவலின்படி, ஷிவக்குமார் வெளியேற்றபட்டு இருக்கலாம் என தெரியவருகிறது.
விஜய் சேதுபதி கண்டிப்பு:
இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் சார்பில் பொம்மை டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது. அப்போது, ராயன் சக போட்டியாளருடன் கடும் வாக்குவாதம் செய்தார். அவர் விளையாடிய விதமும் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இதனால் விஜய் சேதுபதி அந்த விவகாரத்தை மேற்கோளிட்டு அவரை கண்டிக்கிறார். இந்த விஷயம் தொடர்பான பரோமோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ராயனை சேதுபதி கண்டித்த தருணம்:
"#Day56 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV " pic.twitter.com/yynm3LgqMs
— Vijay Television (@vijaytelevision) December 1, 2024
மாறுபட்ட முறையில் எலிமினேஷன்:
"#Day56 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV " pic.twitter.com/WeiZGKyysh
— Vijay Television (@vijaytelevision) December 1, 2024