Bigg Boss Tamil Season 8: ராணவ் - ரயானால் கலவரமான பொம்மை டாஸ்க்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.., வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரோமோவில் பொம்மை டாஸ்க்கில் ராணவ் மற்றும் ரயான் அடித்து கொண்டது பற்றி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

Bigg Boss Tamil Season 8: ராணவ் - ரயானால் கலவரமான பொம்மை டாஸ்க்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதி.., வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Bigg Boss Tamil Season 8 Promo (Photo Credit: YouTube)

நவம்பர் 30, சென்னை (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8 Promo) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 42 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், 2வது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Bigg Boss Tamil Season 8: வெடித்த சண்டை.. ராணவ்வை அடிக்க பாய்ந்த செளந்தர்யா.. வைரலாகும் வீடியோ..!

நீயும் பொம்மை நானும் பொம்மை:

பிக் பாஸில் இந்த வாரம், நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற டாஸ்க் நடத்தப்படுகிறது. இந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்தே சண்டையாக உள்ளது. இந்நிலையில், கேமில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களும் தாங்கள் வெளியேற்ற நினைக்கும் போட்டியாளரின் பொம்மை உள்ளே செல்ல விடாமல் தடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதில், நவம்பர் 30ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், பொம்மை டாஸ்க்கில் ராணவ் மற்றும் ரயான் அடித்து கொண்டது பற்றி விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

இந்த ப்ரோமோவில் ராணவ், ஜெஃப்ரி கொண்டு போன பொம்மையை அங்கு வைக்க விடாமல் தடுக்க, அதற்கு ரயான் கோபப்பட்டு ராணவை அடிக்க பாய்ந்து இருந்தார். இந்த சண்டை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் நடந்த கலவரம் பற்றி தான் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். இதனால், இன்று (நவம்பர் 30) ராணவ் மற்றும் ரயான் இருவருக்கும் ரோஸ்ட் இருக்கிறது. இருவருக்கும் விஜய் சேதுபதி எல்லோ கார்டு கொடுக்கப் போகின்றாரா? அல்லது ரயானுக்கு மட்டும் கொடுக்கப் போகிறாரா? என்று பொறுத்திருந்து இன்றிரவு 9.30 மணிக்கு பார்க்கலாம்.

பிக் பாஸ் ப்ரோமோ:

(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).