Pavithra Vs Tharsika: நீ செஞ்சது தப்பு பவித்ரா - உண்மையை உடைத்த விஜய் சேதுபதி.. கண்டித்த தர்ஷிகா.!

ரஞ்சித் - ரவீந்தர் இடையே நடந்த போலியான சண்டை காரணமாக பிக் பாஸ் வீடே அதகாலமாகியுள்ளது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி போட்டியாளர்கள் செய்த தவறினை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

Pavithra Vs Tharsika: நீ செஞ்சது தப்பு பவித்ரா - உண்மையை உடைத்த விஜய் சேதுபதி.. கண்டித்த தர்ஷிகா.!
Pavithra - Tharsika - Vijay Sethupathi | Bigg Boss Tamil Season 8 | Day 7 Promo (Photo Credit: @VijayTelevision YouTube)

அக்டோபர் 13, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), கடந்த அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் இருக்கின்றனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டு, பின் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். Oviya Leaked? நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக்? பதறிப்போன ரசிகர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்.! 

காரசார பதில்களால் கதிகலங்கும் போட்டியாளர்கள்:

போட்டியின் ஏழாவது நாளான இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே உரையாற்றுகிறார். இன்று எலிமினேஷன் (Bigg Boss Tamil Elimination Today) வாரமும் கூட என்பதால், போட்டியாளர்களுக்கு இடையே யார் வெளியே செல்லப்போகிறோம் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. மேலும், ரவீந்தர் - ரஞ்சித் மற்றும் இன்னபிற போட்டியாளர்கள் சேர்ந்து நிகழ்த்திய பிராங்க், மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது. நேற்று சனிக்கிழமை போட்டியாளர்களிடையே சாதாரணமாக பேசிய விஜய் சேதுபதி, பிரச்சனைகளை கேட்டறிந்துகொண்டார். இன்று அதற்கான காரசார பதில்கள் அளிக்கப்படுகின்றன. Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை வச்சி செய்த விஜய் சேதுபதி; அடுத்தடுத்த கேள்விகளால் வறுத்தெடுப்பு.! 

பவித்ரா Vs தர்ஷிகா:

இந்நிலையில், ரஞ்சித் - ரவீந்தர் (Ranjith Ravindar Prank) இணைந்து திட்டமிட்ட பிராண்ட் தொடர்பான கேள்வியை மீண்டும் எழுப்பிய விஜய் சேதுபதி, பவித்ராவை நோக்கி நீங்களும் அங்கேயே இருந்தீர்கள் என கேள்வி எழுப்புகிறார். இந்த விஷயம் தர்ஷிகாவுக்கு தெரியாத நிலையில், அவர் விஜய் சேதுபதியின் கேள்விக்கு பின் உண்மையை உணர்ந்துகொண்டு, பிராங்க் விசயத்திற்கு உடன்பட்டு செயல்பட்டது தவறு என கூறி இருக்கிறார். இந்த காணொளி பிக் பாஸ் இல்லத்திற்குள் ஏற்பட்டுள்ள அடுத்த பரபரப்பை அதிகரித்துள்ளது.

இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ காண:

(The above story first appeared on LatestLY on Oct 13, 2024 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).