Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்கள் யார்? விபரம் உள்ளே..!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டிசம்பர் 30ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
டிசம்பர் 30, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டு, தற்போது 84 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் வீட்டிலிருந்து அன்ஷிதா, ஜெப்ரி வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது தீபக், ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Actor Dileep Shankar Found Dead: ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்.. திரையுலகினர் அதிர்ச்சி..!
நாமினேஷன் பட்டியல்:
தற்போது வீட்டில்10 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே போட்டி நடக்கவுள்ளது. இதில் வெற்றிபெறும் அந்த ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு தேர்வாகவுள்ளார். மறுபக்கம் இந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ் துவங்கியுள்ளது. தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா,ரயான், ஜாக்குலின் என 8 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ:
(The above story first appeared on LatestLY on Dec 30, 2024 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

