டிசம்பர் 30, திருவனந்தபுரம் (Cinema News): கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் (Actor Dileep Shankar). இவர், ஏராளமான மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல், பஞ்சாக்னி தொடர் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரத்தில் (Thiruvananthapuram) உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. Bigg Boss Tamil Season 8: சௌந்தர்யாவுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க கூடாது? - முத்துக்குமரன் பதில்.. ப்ரோமோ இதோ.!
மலையாள நடிகர் மர்ம மரணம்:
இதனையடுத்து, நேற்று (டிசம்பர் 29) சக நடிகர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், செல்போனை அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக நடிகர்கள், அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. பின்னர், அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் அறையை திறந்து பார்த்தபோது, நடிகர் திலீப் சங்கர் சடலமாக கிடந்தார்.
சடலமாக மீட்பு:
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் திலீப் சங்கர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மறைவுக்கு மலையாள திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 54 வயதான மலையாள நடிகரின் இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.